ஷாருக்கானின் ‘டங்கி’ படத்தின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்களின் அபரிமிதமான அன்பை பெற்று வரும் தருணத்தில் ஷாருக்கின் ரசிகர்கள் அதை வெளிப்படுத்துவதற்காக அவரது வீட்டிற்கு முன் திரண்டனர். இதனை கண்ட ஷாருக்கான், தனது அன்பை பகிர்ந்து கொள்ள அவர்களைப் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார்.
கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட பெரிய கூட்டமொன்று… ஷாருக் கானின் வீடான மன்னத் பகுதியில் திரண்டனர். ஷாருக்கான் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கும், வாழ்த்துவதற்கும் அவர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து உலகம் முழுவதும் அதிகரித்து வரும் டங்கியின் வரவேற்புக்கு இடையே ஷாருக்கான் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை பார்த்து கையசைத்து பறக்கும் முத்தத்தை வழங்கி பிரியத்தை வெளிப்படுத்தினார்.