

இந்த படம் டோக்கியோ முதல் டொராண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.ஜூட் பீட்டர் டேமியான் அடிப்படையில் சார்டட் அக்கவுண்டன்ட். கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். டைரக்ஷன் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து டைரக்ஷன் கற்றுக்கொண்டவர். அவரது முதல் படைப்பு ‘சஷ்தி.’
“இந்த படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டோம். இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூட் பீட்டர் டேமியன்.