சமூக அக்கறையுடன், கிராமத்துப் பின்னணியில் அசத்தலான கமர்ஷியல் படைப்பாக இயக்குநர் எஸ் எஸ் முருகராசு இயக்கியுள்ள திரைப்படம் ‘கடுக்கா.’
விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் ஸ் எஸ் முருகராசு, ”இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நாயகன் விஜய் கௌரிஷ் ”மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் இன்ஸ்பிரேஷன். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பைப் ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில் தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் ”என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவக்க வேண்டும் என்று தான் இந்தப்படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் என கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர் சீரிஸில் துணை நடிகராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரிஷ் பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான்.. இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் ”கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களில் ஒன்றை தேவா சார் பாடி இருப்பது எனக்கு பெருமை. டீசருக்கான பாடலை ஒரு வில்லுப்பாட்டு போன்று 20 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தேன். கதாநாயகி பற்றி நான் எழுதி இருந்த பாடல் வரியை குறிப்பிட்டு தேவா சார் பாராட்டினார். தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்குவது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல பெரிய விஷயம்” என்றார்.
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் ”படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் பார்வையில் படத்தைச் சொன்னதற்குப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நடித்த அனைவருக்கும் பட ரிலீஸுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகளும் பெரிய பேரும் கிடைக்கும். ஆனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹிரோயின் வரவே இல்லை. ஏதோ வெப் சீரிஸ் வாய்ப்பில் அவர் பிஸியாகிவிட்டார் என்றார்கள். கஷ்டப்பட்டு இவர்கள் எடுத்த படத்தால் பிரபலமாகிவிட்டு, பட விழாவிற்கு வராமல் இருப்பது குற்றம். இனிமேல் படத்தில் புக் செய்யும்போதே அவர்கள் விழாக்களுக்கும் வர வேண்டுமென ஒப்பந்தம் போட வேண்டும்.. படக்குழுவினர் அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் கௌரி சங்கர் எந்த விளம்பரமும் இல்லாமல் பல சமூகப் பணிகள் செய்து வருகிறார். அவரது மனதுக்காக கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி” என்றார்.
நடிகர் சௌந்தர்ராஜா ”கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்
நிகழ்வில் தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி, இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா, தயாரிப்பாளர் சிவி குமார், இயக்குநர் ஆர் வி உதயகுமார், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

