சமுத்திரக்கனி, பரத் முதன்முறையாக இணைந்து நடித்த ‘வீரவணக்கம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி வெளியாகிறது.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்ஷ்மி நடித்திருக்கிறார்.
புரட்சிகரமான சமூகக் கருத்துக்களை கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெற்றிருக்கிறது.
சம காலத்தில் நடைபெறும் சமூக அவலங்களும், கடந்த காலத்தில் நடந்த புரட்சிகளும் இந்த கதையில் முக்கியமான ஒரு கருத்தை நமக்கு உணர்த்தும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதில் படம் பார்த்த பிரபலங்கள் பலரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

