வில்லனாக நடிக்க வேண்டும்! -விருப்பம் தெரிவிக்கிறார் ‘ஹார்ட் பீட்’ சர்வா

நடிகர் சர்வா ‘ஹார்ட் பீட்’ வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார்.

‘ஆர்.கே. நகர்’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டுக்களைக் குவித்துள்ளார். இப்போது அதர்வா நடிப்பில் இந்த மாதம் 12-ம் தேதி வெளியாகவுள்ள தணல்’ படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது நடிப்புத் திறனை இன்னும் சிறப்பாக்க, நெகட்டிவ் கதாபாத்திர வாய்ப்புகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் சர்வாவிடம் பேசியபோது “ஹார்ட் பீட் சீரிஸ் நான்கைந்து படங்களில் நடித்த அளவு மிகப்பெரிய அனுபவத்தை தந்தது. அது மட்டுமல்லாமல் நண்பர்கள், ரசிகர்கள் என்னை குணா என்று தான் அழைக்கிறார்கள். அதை என் நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன்.

நல்ல நெகட்டிவ் ரோல்ஸ் கிடைக்கும்போது தான், நடிப்பின் பல பரிமாணங்களைக் காட்ட முடியும். ஆகவே அப்படிப்பட்ட பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்” என்கிறார்.

அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் விதத்திலான வாய்ப்புகள் குவியத் தொடங்கியிருக்கிறது.

சர்வா பற்றி:

சட்டம் படித்து வழக்கறிஞர் பட்டம் பெற்றிருக்கும் சர்வா, படிக்கும்போதே நாடகங்கள் நடிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஹார்ட் பீட்’ வெப் சீரிஸ் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் பரிச்சயமான முகமாக மாறினார். இப்போது வெள்ளித்திரையிலும் அசத்த ஆரம்பித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here