வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில், விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஹரா.’ இந்த படத்தில், மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான ‘கோடங்கி’ ஆபிரகாமின் மகன் சந்தோஷ் பிரபாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகிறார்.
நடனம் உள்ளிட்ட கலையுலகுக்கான அடிப்படைத் தகுதிகளை, திறமைகளை வளர்த்துக் கொண்டு நடிப்புப் பயணத்தை துவங்கியுள்ள சந்தோஷ் பிரபாகருக்கு ஹரா நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கும் என்பது உறுதி!