டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் ‘வித் லவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை, தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
இந்த படத்தை லவ்வர், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார்.
முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் ‘வித் லவ்’ தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்

