ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்துக்காக உருவாக்கியுள்ள வெப் சீரிஸ் ‘கோலி சோடா – தி ரைசிங்.’
ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸில் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், ஆர் கே விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன், மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸ் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி என 7 மொழிகளில் வெளியாகவுள்ளது.
பாடல்களுக்கு எஸ் என் அருண்கிரி இசையமைக்க, சைமன் கே கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.