‘சமூக ஆர்வலர்’ சத்யாவிடமிருந்து வந்திருக்கிற பெருமிதமான செய்தி இது…
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 138-வது வார்டில் தன்னலன் பாராது மக்கள் நலனுக்கா சமூக அக்கறையுடன் பணியாற்றிய எனக்கு சென்னை மாநகராட்சியின் சார்பில், சென்னை மாநகராட்சியின் 138-வது வார்டு மாண்புமிகு மாமன்ற உறுப்பினர் அவர்களின் கரங்களால் இன்று ( 04.09.2022 ) பாராட்டுச் சான்றிதழும், பதக்கமும் பெற்றதில் பெருமிதமும், பெருமகிழ்வும் கொண்டுள்ளேன்.
என்னை சிறந்த சமூக ஆர்வலராக தேர்வுசெய்த மாண்புமிகு. விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களுக்கும், வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சியின் மேயர் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி 138வது வார்டு மாண்புமிகு மாமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சியின் மதிப்பிற்க்குறிய முதன்மை செயலர் மற்றும் ஆணையர் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி மண்டலம்-10 மண்டல அலுவலர் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி 138-வது வார்டு உதவிப் பொறியாளர் அவர்களுக்கும், திரு. இமான் அவர்களுக்கும், திரு. சபரி அவர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்!