யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் காமெடி, திரில்லர் திரைப்படம் ‘ஷூ.’ இப்படத்தில் யோகிபாபுவுடன் ரெடின் கிங்ஸ்லி, கேபிஒய். பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நெட்கோ ஸ்டுடியோஸ் (Netco Studios) சார்பில் நியாஷ் – கார்த்திக் மற்றும் ஏ.டி.எம். புரொடக்ஷன்ஸ் (ATM Productions) டி. மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் பாக்யராஜ், ”புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதால்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார்.
இயக்குனர் கல்யாண், ”இந்த படத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்களின் நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினர் நக்கீரன் கோபால், இந்த படத்தின் கதைகரு தான் இந்த இசை வெளியீட்டிற்கு நான் வர காரணம். குழந்தை கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்றவை நடக்காமல் இருப்பதற்காக போராடும் நக்கீரன் சார்பில் இந்த விழாவிற்கு நான் வந்துள்ளேன். தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எடுக்க தயாரிப்பாளருக்கு எனது வாழ்த்துகள். சமூகத்தில் பாலியல் குற்றம் சம்பந்தமான பிரச்சனை வந்தாலே முதலில் எங்களிடம் தான் வருகிறார்கள். அது பற்றிய உண்மையை நாம் தான் வெளிக்கொண்டுவர வேண்டியுள்ளது. இது போன்ற திரைப்படங்கள் எடுக்க தனி தைரியம் தேவை. அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு எனது வாழ்த்துகள” என்றார்.