பிரைம் வீடியோவில் முதல் தமிழ் டார்க் ஹுயூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங்! 

பிரைம் வீடியோவில் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடர் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவிருக்கிறது. பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் முதல் தமிழ் டார்க் ஹுயூமர் த்ரில்லர் இது.

தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here