5 ஆண்டுகளில் 1 லட்சம் மரச்செடிகளை நட்டு சேவையாற்றிய நடிகர் சௌந்தரராஜாவுக்கு சிறந்த மனிதநேய விருது!

டேக் கேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் (Take Care International Foundation) என்ற அமைப்பு மக்களுக்காக சேவை செய்யும் சிறந்த மனிதர்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் ‘Pride of Humanity’ என்ற பெயரில் சிறந்த மனிதநேய விருது வழங்கி கௌரவிக்கிறது.

இந்த ஆண்டிற்கான சிறந்த மனிதநேய விருது மலேசியாவின் கோலாலம்பூரில் நடிகர் சௌந்தரராஜாவுக்கு வழங்கப்பட்டது!

தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரச்செடிகளை நட்டு, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தையும் மக்களிடம் எடுத்துக்கூறி பொது வாழ்க்கையிலும் ஈடு படுத்தி கொண்டிருப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதினைப் பெற்றுக் கொண்ட நடிகர் சௌந்தரராஜா, ”நான் செய்வது சேவை அல்ல கடமை. மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த மண்ணுக்காகவும் இந்த மண்ணில் பிறந்த மக்களுக்காவும் உழைப்போம். இந்த விருதை விவசாயிகளுக்கும் இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

நிகழ்ச்சியில் மலேஷியா செலங்கூர் மன்னர் சலாகுத்தீன் அப்துல் அஜிஸ் ஷா, டத்தோ சசிகலா சுப்ரமணியம் ( Deputy Director of police – Malaysia Royal police ) மற்றும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் பேரன் கலாம் பவுண்டேஷன் சலீம், ஸ்ரீமதி கேசன், டேக் கேர் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் நிறுவனர் முகமது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here