‘டிக் டிக் டிக்’, ‘மிருதன்’, ‘டெடி’ என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை மையப்படுத்தி படம் இயக்கும் சக்தி சௌந்தர் ராஜன் இப்போது முற்றிலும் புதிய களத்தில், சயின்ஸ் பிக்சன் ஏலியன் சர்வைவல் திரில்லராக இயக்கியிருக்கிற படம் ‘கேப்டன்.’
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன், ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஆரம்ப புள்ளி இருக்கும். அந்த கணத்திலிருந்தே அதன் மொத்த பயணமும் தொடங்கும். கேப்டன் படத்தை பொறுத்தவரை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடும் படியான ஒரு படைப்பை, இது வரை பார்த்திராத விஷுவல்களுடன் புதிய ஆக்சனுடன் பிரமாண்டமாக தர வேண்டுமென்பதாக இருந்தது. முதலில் இது சாத்தியமில்லை என்றே நினைத்தேன் ஆனால் ஆர்யா மற்றும் தயாரிப்பாளர் ஸ்வரூப் தந்த ஆதரவு எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை தந்தது. என் மீது அவர்கள் வைத்த முழுமையான நம்பிக்கையில் தான் நான் இந்த படைப்பை உருவாக்க முடிந்தது. ஒரு படத்தின் பட்ஜெட்டை விட இயக்குநருக்கும் நடிகருக்கும் உள்ள சுமூகமான உறவால் தான் ஒரு அருமையான படம் உருவாக முடியும் அந்த வகையில் ஆர்யாவுடன் டெடி படத்தில் பணியாற்றும் போதே ஒரு சகோதரர் போன்ற உறவு உண்டாகிவிட்டது. இந்தப்படத்தில் அவரது உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. முன்னெப்போதிலும் இல்லாத ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றார்.
படம் குறித்த கூடுதல் தகவல்கள்:- ‘டெடி’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இணைந்துள்ள ஆர்யா -சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தபடத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி , கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனம் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம், வரும் செப்டம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படக்குழு:- S.யுவா (ஒளிப்பதிவு), D இமான் (இசை), பிரதீப் E ராகவ் (எடிட்டர்), S.S.மூர்த்தி (தயாரிப்பு வடிவமைப்பு), R.சக்தி சரவணன்- K கணேஷ் (ஸ்டண்ட்ஸ்), தீபாலி நூர் (ஆடை வடிவமைப்பு), S மூர்த்தி (ஸ்டில்ஸ்) , NXgen (VFX), V அருண் ராஜ் (VFX மேற்பார்வையாளர்), Igene (DI), சிவசங்கர் V (வண்ணக்கலைஞர்), தபஸ் நாயக் (ஆடியோகிராபி), அருண் சீனு (ஒலி வடிவமைப்பு), கோபி பிரசன்னா (பப்ளிசிட்டி டிசைன்), S சிவக்குமார் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் ), K. மதன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One(மக்கள் தொடர்பு)