அடுத்த படம் தயார்… மோஷன் போஸ்டரில் போர் வீரனாக கம்பீரம் காட்டும் சூர்யா!

நடிகர் சூர்யா, சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா42’ என தலைப்பிடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் சூர்யா கூர்மைமிகு போர் வீரனாக, மிடுக்கான தோற்றத்தில் அசத்தலாக இருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் விஷுவலும்  ரசிகர்களுக்கு உற்சாகத்தை வழங்கியுள்ளது.

மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தில்  பாலிவுட் நடிகை திஷா பட்டாணி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிவா இயக்குகிறார்.  வலிமை மிகு வீரம் எனும் அடைமொழியுடன் வரும் டைட்டில் கதையின் தன்மையை சொல்வதாக அமைந்துள்ளது.

இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. பட வெளியீடு குறித்த மற்ற விவரங்களை விரைவில் அறிவிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

படக்குழு:- 

இசை: ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத். ஒளிப்பதிவு: வெற்றி பழனி சுவாமி.
கலை: மிலன்
எடிட்டர்: நிஷாத் யூசுப்
சண்டைக்காட்சிகள்: சுப்ரீம் சுந்தர்
இணை : எழுத்தாளர் : நாராயணா
வசனங்கள்: மதன் கார்க்கி
நடனம்: ஷோபி
உடைகள்: ராஜன்
காஸ்ட்யூம் டிசைனர் : தாட்சயணி, அனு வர்தன்
ஒப்பனை: குப்புசாமி
தயாரிப்பு ஒருங்கிணைப்பு: R S சுரேஷ்மணியன்
VFX: ஹரிஹர சுல்தான்
ஸ்டில்ஸ் : C.H.பாலு
விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா PRO: Suresh Chandra & Rekha D’One
தயாரிப்பு : K.E.ஞானவேல் ராஜா, வம்சி,பிரமோத்
பேனர்: Studio Green | UV creations.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here