குஜராத்தி சினிமாவை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், குஜராத்தி திரையுலகின் முதல் பான் இந்தியா திரைப்படமாக, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ‘ஸ்ரீ கேசரி நந்தன்.’ 

தென்னிந்திய மற்றும் குஜராத்தி கலைஞர்களின் தனித்துவமான கூட்டணி
இந்த பிரமாண்ட திரைப்படத்தை, விருது பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் சபரிநாதன் முத்துப் பாண்டியன் எழுதி இயக்குகிறார்.

பிரபல நடிகர்கள் அர்பித் ரங்கா, மௌலிக் சௌஹான் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
நம்பிக்கை, பக்தி, பாரம்பரியம், மாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு குஜராத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய மதிப்புகளை இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியமான முயற்சியாக இந்த படம் உருவாகிறது.
படம் குஜராத்தி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என மொத்தம் 7 இந்திய மொழிகளில், 2027-ம் ஆண்டு ராம நவமி தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சர்வதேச தரத்திலான காட்சியமைப்பை உருவாக்குவதற்காக, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
புகழ்பெற்ற கன்னட இசையமைப்பாளர் அபிநந்தன் காஷ்யப் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மஹிபால் சிங் ரணாவத், ராஜேஷ் தாக்கூர், ஹிரேன் படேல் மற்றும் பரேஷ் ஜக்டா ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.
குஜராத்தி சினிமாவுக்கு புதிய அடையாளத்தை உருவாக்கும் இந்த படம், இந்திய சினிமாவின் பல்வேறு பிராந்தியங்களையும் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும்முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

