தற்போது தனது சொந்த தயாரிப்பில், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘ரெக்கை முளைத்தேன்’ படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக ‘கொலைகார கைரேகைகள்’ எனும் வெப் தொடரையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் சுந்தர பாண்டியன் படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தமிழ்நாடு அரசின் விருதை வென்றுள்ளார்.
இது குறித்து இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன், “திரையுலகில் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக கடப்பது மிகப்பெரியது. பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தரும் கருத்துக்களும் ஆதரவும் தான் என்னை வளர்த்தெடுத்துள்ளது. என்னை இயக்குநராக உலகமெங்கும் கொண்டு சேர்த்துள்ளது. இந்நேரத்தில் எனது படைப்புகளுக்கு பெரும் ஆதரவை தந்த ரசிகப் பெருமக்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் ரசிக்கும்படியான உங்களுக்கு பிடித்தமான படைப்புகளை தொடர்ந்து உருவாக்குவேன்” என்றார்.


