Home பொது ஆதேஷ்பாலா சமூகநீதிப் போராளி; முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார்… டிசம்பரில் ரிலீஸாகும் சிவப்பு மனிதர்கள் படத்தின்...

ஆதேஷ்பாலா சமூகநீதிப் போராளி; முக்கிய கதாபாத்திரத்தில் வனிதா விஜயகுமார்… டிசம்பரில் ரிலீஸாகும் சிவப்பு மனிதர்கள் படத்தின் அசத்தல் காம்போ!

ஸ்ரீ முத்துமாரியம்மன் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் கதை நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் லிவிங்ஸ்டன் வனிதா விஜயகுமார் நடிக்க, கதைநாயகி மீனாட்சியின் சகோதரனாக சமூக நீதி போராளியாக ஆதேஷ் பாலா நடித்துள்ளார்.

சங்கர், சோனா, கஞ்சா கருப்பு, ரேஷ்மா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பெஞ்சமின், பாரதி கண்ணன் வேல்முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அன்பு சரவணன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். குடும்பம், காதல், மோதல், சமூக பார்வையோடு தயாராகியிருக்கும் இந்த படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஒளிப்பதிவு – தங்க பாண்டியன் கடை பத்மநாபா கதிர். இசை-  விஜய் மந்தாரா. பாடல்கள் – கவிஞர் விவேகா, அறிமுக கவிஞர் ஏ. மு. ராதா, இயக்குநர் அன்பு சரவணன். எடிட்டிங் – ராஜ் கீர்த்தி. நடனம் – ரவிதேவ் பவர் சிவா. சண்டைப் பயிற்சி – தீப்பொறி வித்யா, ஸ்டண்ட் ஜாகிர். தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக் ரெட்டி. தயாரிப்பு சரவணன் பாலு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்