Home பொது திருமணத்துக்கு பத்திரிகையாளர்களை அழைக்காதது ஏன்? நடிகை பிரியா பவானிஷங்கர் விளக்கம்

திருமணத்துக்கு பத்திரிகையாளர்களை அழைக்காதது ஏன்? நடிகை பிரியா பவானிஷங்கர் விளக்கம்

பிரபல நடிகை பிரியா பவானிஷங்கர் தனது காதலர் ராஜ் என்பவரை மணந்தார். அவர்களின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி இரு தரப்பு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பத்திரிகையாளர்களுக்கும் அழைப்பில்லை. அது குறித்து பிரியா பவானிஷங்கர் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், ‘நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாகத் திருமணத்தைக் கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் விரும்புகிறோம். உங்கள் அன்பு என்றும் எங்களுடன் இருக்கட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்