ஐஸ்வர்யா ராஜேஷ் கதைநாயகியாக நடித்திருக்கும் படம் ‘சொப்பன சுந்தரி.’ லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.
‘லாக்கப்’ படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் இந்த படத்தை டார்க் காமெடி ஜானரில் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கின்றன. விரைவில் டீசர் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம் இது.
படக்குழு:
பின்னனி இசை – விஷால் சந்திரசேகர் பாடல்கள் இசை – அஜ்மல்
ஒளிப்பதிவு – பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன்