ஷூட்டிங் நிறைவடைந்த நாளில் 200 பேருக்கு சிறப்பான உணவு… ‘ஜோ’ பட அனுபவம் பகிர்கிறார் ரியோ! 

மிகச்சில நடிகர்கள் மட்டுமே, ’நம் பக்கத்து வீட்டு பையன்’ என்ற உணர்வைக் கொடுத்து நம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொள்வார்கள். அந்த வகையில், நிறைய நடிகர்கள் இந்த வகையில் உள்ளே நுழைந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

இதில் நடிகர் ரியோ ராஜூம் ஒருவர். காமெடி எண்டர்டெயினராக பார்வையாளர்களை மகிழ்வித்தவர் தற்போது அழகான ஃபீல் குட் ரொமாண்டிக் எண்டர்டெயினரான ‘ஜோ’ படத்துடன் வருகிறார். இதனை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்க, விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர். டி. அருளானந்து தயாரிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் பான் இந்திய நடிகரான துல்கர் சல்மான் வெளியிட இதற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

நடிகர் ரியோ ராஜ் பேசும்போது, “’ஜோ’ எங்கள் நண்பர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட எங்கள் ஒட்டுமொத்த அணியின் அடையாளம் மற்றும் முகவரி. மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். கதாநாயகனான ‘ஜோ’வின் பள்ளிக் காலத்தில் இருந்து அவனது திருமணத்திற்குப் பிந்தைய நாட்கள் வரையிலான காதல் பயணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. படத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்காக நான் நீண்ட முடி மற்றும் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பேன். இதன் காரணமாகவே, வேறு எந்த புராஜெக்ட்டிலும் கடந்த இரண்டு வருடங்களாக நான் ஈடுபட முடியாமல் இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஹரிஹரன் ராமுடன் இருக்கும் நட்பு பற்றி பகிர்ந்த கொண்ட ரியோ ராஜ், “அவர் என்னுடைய முதல் படத்தின் இயக்குநர் மற்றும் எங்களுக்குள் நான்கு வருட நட்பு இருக்கிறது. ஒரு அணியாக எங்களுடைய சிறந்ததைக் கொடுத்திருக்கிறோம். படப்பிடிப்பு நிறைவடைந்த நாளில் தயாரிப்பாளர் எங்கள் படக்குழுவை பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும்,  அணியில் உள்ள 200 பேருக்கும் படப்பிடிப்பின் கடைசி நாளில் சிறப்பான மதிய உணவு கொடுத்தார். இது எங்களை உற்சாகமடையச் செய்த தருணங்களில் ஒன்று.”

மொத்த படப்பிடிப்பும் வெறும் 37 நாட்களில் முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகர் ரியோ ராஜ் பகிர்ந்துகொண்டதாவது, “இதற்கு தயாரிப்பாளரின் ஒத்துழைப்புதான் முழுமுதற் காரணம். எங்களுடைய தயாரிப்பு நிர்வாகி வீர சங்கர் சார் பற்றியும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் தினமும் சரியாக பேமெண்ட் கொடுத்து மொத்த படப்பிடிப்பு குழுவையும் உற்சாகப்படுத்தினார். இது சிறந்த அவுட்புட் வர ஒரு காரணமானது.

ஜோ’ 100% பார்வையாளகளுக்கு ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரியாக இருக்கும். படத்தின் டீசர் அந்த உணர்வை நிச்சயம் கடத்தும்” என்றார்.

சென்னை, ராமேஸ்வரம், ராம்நாடு, பொள்ளாச்சி, பாலக்காடு மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. முதலாமடை ரயில் நிலையத்திலும் படமாக்கப்பட்டுள்ளது என்பது இதில் உள்ள சுவாரஸ்யமான உண்மை. நடிகர் கமல்ஹாசனின் ‘அன்பே சிவம்’ படத்திற்கு அடுத்து பல வருடங்கள் கழித்து ‘ஜோ’ திரைப்படம் மட்டும் தான் இந்த லொகேஷனில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் தொழில்நுட்பக் குழு:-

இசை: ‘பேச்சுலர்’ படப்புகழ் சித்துகுமார்,
ஒளிப்பதிவு: ராகுல் கே.ஜி. விக்னேஷ்,
படத்தொகுப்பு: வருண் கே.ஜி.,
கலை இயக்குநர்:  ABR,
சண்டைப் பயிற்சி: பவர் பாண்டியன்,
தயாரிப்பு கட்டுப்பாடு: எல்.எம். தனசேகர்,
ஒளிப்பதிவு: அபு & சால்ஸ்,
பாடல் வரிகள்: வைசாக் விக்னேஷ் ராமகிருஷ்ணா,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா D’One

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here