அடுத்தடுத்த படங்களில் பிஸியான ஷாம்! வாரிசு பட வெற்றிக்குப் பின் உற்சாகம்!

கனமான கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிற ஷாம், கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான ‘வாரிசு’ படத்தில் தளபதி விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதோடு, ஷாமின் நடிப்புக்கும் பெருத்த வரவேற்பை தேடித்தந்தது.

அதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து உற்சாகமாகியிருக்கிறார் ஷாம்.

அவர் இப்போது ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமாரை வைத்து விஜய் மில்டன் இயக்கிய ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

விஜய் மில்டன் படத்தை தொடர்ந்து இன்னும் சில முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here