வரலஷ்மி சரத்குமார் இதுவரை ஏற்காத பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘சபரி.’ இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷாஷங்க், மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
கடந்த இரண்டு வார காலமாக கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.
இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்டலா, ”கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்பில் வரலஷ்மியுடன் படத்தின் முக்கிய நடிகர்கள் பங்கேற்றார்கள். 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் ஒரு பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கினோம். குறிப்பிட்ட அந்த பாடலுக்கு சுசித்ரா சந்திரபோஸ் நடனம் அமைத்துள்ளார். நந்து – நூர் இயக்கியுள்ள சண்டை காட்சிகளையும் படமாக்கினோம்.
அடுத்ததாக விசாகப்பட்டினத்தில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் பதிவு செய்து விட்டோம். பாடல்களை பாடகி சித்ரா, அனுராக் குல்கர்னி, ரம்யா பெஹரா மற்றும் அம்ரிதா சுரேஷ் பாடியிருக்கிறார்கள்” என்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கிற இந்த படத்தின் இயக்குநர் அனில் கட்ஸ், “படம் சைக்காலஜிக்கல் த்ரில்லராக பரபரப்பான திருப்பங்களை கொண்டதாக இருக்கும். வரலக்ஷ்மி சரத்குமார் பல கட்டங்களை உள்ளடக்கிய எமோஷனலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்னால் இது போன்ற வேடத்தில் அவர் நடித்ததில்லை.
படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக அவரவர் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு த்ரில்லிங்கான அனுபவத்தை தரும்” என்றார்.
கோபி சுந்தரின் இசை படத்தில் முக்கிய கவனம் பெறும்.
படத்தின் நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் குழு விவரம்:
வரலஷ்மி சரத்குமார்,
கணேஷ் வெங்கட்ராமன்,
ஷாஷங்க்,
மைம் கோபி,
சுனைனா,
ராஜ்ஸ்ரீ நாயர்,
மதுநந்தன்,
ரஷிகா பாலி (பாம்பே),
ராகவா,
பிரபு,
பத்ரம்,
கிருஷ்ண தேஜா,
பிந்து பகிடிமாரி,
அஷ்ரிதா வேமுகந்தி,
ஹர்ஷினி கொடுரு,
அர்ச்சனா ஆனந்த்,
ப்ரோமோதினி பேபி நிவேக்ஷா,
பேபி கிருத்திகா மற்றும் பலர்…
கதை- திரைக்கதை – வசனம்: அனில் கட்ஸ்
கூடுதல் திரைக்கதை: சன்னி நாகபாபு,
பாடல்கள்: ரஹ்மான், மிட்டாப்பள்ளி சுரேந்தர்,
ஒப்பனை: சித்தூர் ஸ்ரீனு,
உடைகள்: மானசா,
படங்கள்: ஈஸ்வர்,
விளம்பர வடிவமைப்பு: சுதிர்,
டிஜிட்டல் & மார்க்கெட்டிங்: விஷ்ணு தேஜ் புட்டா,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
தயாரிப்பு நிர்வாகம்: லக்ஷ்மிபதி கண்டிபுடி,
இணை இயக்குநர்: வம்சி,
சண்டைப் பயிற்சி: நந்து- நூர்,
VFX: ராஜேஷ் பல,
நடன இயக்குநர்கள்: சுசித்ரா சந்திரபோஸ்- ராஜ் கிருஷ்ணா,
கலை இயக்குநர்: ஆஷிஷ் தேஜா புலாலா,
எடிட்டர்: தர்மேந்திரா ககரலா,
ஒளிப்பதிவு: நாஞ் சமிதிஷெட்டி,
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: சீதாராமராஜூ மலேலா,
இசை: கோபி சுந்தர்,
வழங்குபவர்: மஹரிஷி கொண்டலா,
தயாரிப்பாளர்: மகேந்திர நாத் கொண்டலா,