ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம், செயின்ட் ஜூட்ஸ் அமைப்புடன் இணைந்து, செயின்ட் ஜூட்ஸ் ஃபார் லைப் எனும் திட்டத்தின் கீழ், புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு காப்பீடு வழங்கி வருகிறது.
அந்த திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அதே திட்டத்தின் மூலம், இந்த ஆண்டு, கூடுதலாக 500 குழந்தைகளை சேர்க்க இலக்கு வைத்துள்ளது.
புற்றுநோயில் இருந்து தப்பிய குழந்தைகளுக்கு விரைவில் காப்பீடு வழங்குவதாக ஸ்டார் ஹெல்த் அறிவித்தது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலிசி, குழந்தைகளுக்கு உடல்நலம் மற்றும் விபத்து காப்பீட்டை வழங்கும்.
ஆரம்பத்தில் ராணி விகாஜியின் நினைவாக நிறுவப்பட்ட இந்த தனித்துவமான முயற்சி, ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது நவம்பர் 4, 2021 அன்று தொடங்கப்பட்டது. தவிர, இந்தியா முழுவதும் செயின்ட் ஜூட்ஸைச் சேர்ந்த 326 குழந்தைகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தில் மருத்துவ காப்பீட்டின் கீழ் 270 குழந்தைகளும், விபத்துக் காப்பீட்டின் கீழ் அனைத்து 326 குழந்தைகளும் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட ஜூடியன்களுக்கு (புற்றுநோயிலிருந்து தப்பிய குழந்தை பராமரிப்பு மையத்தின் குழந்தைகள்) வழங்கப்பட்ட பாலிசிகளுக்கு, ஸ்டார் ஹெல்த் தொடர்ந்து உத்தரவாதமாய் இருக்கும்.
இந்த முயற்சியானது, ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் ஒரு முக்கிய எல்லையாக இருக்கிறது மற்றும் மருத்துவ காப்பீடு கவரேஜில் அதிகம் கவனிக்கப்படாத இடைவெளியில் கவனம் செலுத்துகிறது. தி ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டி, இந்த கூட்டாண்மையை எளிதாக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. செயின்ட் ஜூட்ஸில் குழந்தைகளின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் இன் எம்.டி.டாக்டர் எஸ். பிரகாஷ் ஊடகத்தினரிடம் பேசும்போது ”புற்று நோய் பாதித்து போராடுகிறவர்களுக்கு மட்டுமின்றி அவர்களது உடன்பிறப்புகளுக்கும் ஆதரவளிப்பதன் மூலம், இந்த ஆண்டு எங்கள் கூட்டாண்மையை விரிவுபடுத்துகின்றோம், இதனால் பெற்றோர் மற்றும் குழந்தைகள் அவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்த முடியும். சமூகத்தின் பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்தப் பிரிவை நடைமுறைப் படுத்துவதில் மகிழ்ச்சியடைகினறோம். செயின்ட் ஜூட்ஸ் ஃபார் லைஃப், புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்ற, ஜூடியன்கள் என்று குறிப்பிடப்படும், குழந்தைகளுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களின் திறனை நிறைவேற்ற முடியும் என்று உறுதி செய்கிறது. அந்தத் நோக்கத்தில் அவர்களுக்கு உடல்நலக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்குவது ஒரு முக்கியமான படியாகும்” என்றார்.
செயின்ட் ஜூட்ஸின் CEO அனில் நாயர், “செயின்ட் ஜூட்ஸில், ஜூடியன்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படும் எங்களின் அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், அவர்களின் கல்வியை முடிக்கவும், நல்ல ஆரோக்கியத்தைப் பேணவும், வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தவும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கு, சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான உதவி கிடைப்பதை உறுதிசெய்வதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு வழங்குவது, அந்த நோக்கத்தில் மிகவும் அவசியமான முக்கியமான படியாகும். குழந்தை புற்றுநோயால் உயிர்பிழைத்தவர்கள் இளம் வயதினர் ஆவர் மேலும் அவர்களுக்கு முன்னால் ஒரு நீண்ட வாழ்க்கையை கொண்டுள்ளனர். இந்த மருத்துவக்காப்பீடு, அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வுடன் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கும், அவர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளை நோக்கி எந்தவித அச்சமும் இல்லாமல் செயல்படவும் உதவுகிறது. இந்த திட்டத்தின் வெற்றிகரமான ஒரு வருடத்தில் நாங்கள் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோம்” என்றார்.
இந்த முயற்சி குறித்து, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டியின் அங்கீகாரத் தலைவர் டாக்டர் ரேகா ஷெட்டி “சென்னை மற்றும் வேலூரில் உள்ள செயின்ட் ஜூட்ஸுடன் முதல் நாளிலிருந்தே இணைந்திருப்பது ஒரு பாக்கியமாக உள்ளது. புற்றுநோயிலிருந்து தப்பிய குழந்தைகளுக்கான இந்த காப்பீடு, உலக அளவில் கூட தனித்துவமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது. மெட்ராஸ் டெம்பிள் சிட்டியின் ரோட்டரி கிளப், ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் உடன் இணைந்து, அதன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. வி. ஜகந்நாதன் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ் பிரகாஷ் மூலம் இதை எளிதாக்கியதில் பெருமை கொள்கிறது” என்றார்.