இயக்குநர் பாலாஜி மோகனின் நிறுவனம் தயாரிக்கும் அசத்தலான காமெடி வெப் சீரிஸ்.. படப்பிடிப்பு தீவிரம்!

இயக்குநர், தயாரிப்பாளர் பாலாஜி மோகனின் ஓப்பன் வின்டோ (Open Window) மற்றும் டிரென்ட் லெளட் இன்டியா டிஜிடல் (Trend Loud India Digital) நிறுவனங்கள் இணைந்து தங்களது இரண்டாவது படைப்பாக, புதிய தமிழ் இணைய தொடரை (Web series) வெளியிடவிருக்கின்றன. இந்த தொடரை இயக்குநர் பாலாஜி மோகனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.

அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, எஸ்.பி.பி. சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.

கிரியேட்டிவ் புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி இத்தொடரை தயாரிக்கிறார். சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

ஒளிப்பதிவு : சிவா GRN
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : ஜூலியன்
கலை இயக்குநர் : ஶ்ரீராமன் E
காஸ்ட்யூம் டிசைனர்: திப்தி தேசாய்
பப்ளிசிடி டிசைன் : சிவகுமார் S (Sivadigitalart)
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விக்டர் பிரபாகரன்.M
கிரியேட்டிவ் புரடக்சன் குழு : நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா
புரடக்சன் மேனேஜர் : MV ரமேஷ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here