போர் பதற்றத்தால் தள்ளிப்போன ‘தி வெர்டிக்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீடு!

வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள, கொலை சார்ந்த புலனாய்வுக் கதையில் உருவான ‘தி வெர்டிக்ட்’ திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில்,ஃபர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கி வெளியிட்டிருந்தார்.

படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக அதிகரித்தது.

இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதில் ‘திருடா’ என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு மே மாதம் 11-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here