ஹிர்து ஹாரூன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘டெக்ஸாஸ் டைகர்.’
சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, ஃபேமிலி படம்’ படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் எழுதி இயக்குகிறார்.
‘ஃபேமிலி படம்’ படத்தை தயாரித்த UK Squad எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் விரைவில் வெளியாகும்.



