தமிழ் இலக்கியச் சுழலில் தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளிகளுக்கு வழங்கப்படுகிற கெளரவமிக்க விருதுகளில் ஒன்று ‘தமிழ்ப் பேராய விருது.’
எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை உலகம் முழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் ‘தமிழ்ப்பேராயம்’ என்ற அமைப்பை 2010-ம் ஆண்டு தொடங்கியது.
தமிழ்ப்பேராயம் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள், படைப்பாளிகள், தமிழமைப்புகளின் தலைவர்களைக் கொண்ட குழுக்களின் அறிவுரைகளின்படி, விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு இயங்குகிறது.
தமிழ்ப்பேராயத்தின் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். 2012-ம் ஆண்டுமுதல் ஒவ்வோர் ஆண்டும் 12 தலைப்புகளில் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும் தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 2 கோடியே 20 இலட்சம் அளவிலான பரிசுத் தொகை இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் 89 படைப்பாளர்கள் விருது பெற்றுள்ளனர். அவர்களில் அமெரிக்கா, கனடா, இலங்கை, சுவிடசர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களும் படைப்பாளகளும் அடங்குவர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அறிஞர்களுக்குப் தமிழ் அமைப்புகளுக்கும் விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்ப்பேராய விருதுகள் தகுதிவாய்ந்தோர்க்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் தமிழ்ப்பேராய விருதாளர்கள் அதன்பிறகு சாகித்திய அகாடமி விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகளையும் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளையும் பெற்றுள்ளனர்!
2022-ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டு, 407 பரிந்துரைகள் வரப்பெற்றன. அவற்றுள் தகுதி வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்க, ஏற் கெனவே இரண்டு நிலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நிறைவாக ஓய்வுபெற்ற நீதியரசர் க. ஞானப்பிரகாசம் தலைமையில் அமைக்கப்பட்ட அறிஞர் குழுவினர் விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
விருதாளர்கள் யார் யார் என்பதை 12.10. 2022 புதன் கிழமையன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் அறிவித்தார்.
விருதாளர்களின் விவரம்
புதுமைப்பித்தன் படைப்பியலுக்கு விருது – வடசென்னை நிவேதிதா லூயிஸ்
பாரதியார் கவிதை விருது – மவுனன் யாத்திரிகா
அழ வள்ளியப்பா குழந்தை விருது -முருகதாஸ், விழியன் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது -சித்தார்த்தன்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது -கருவூர் கண்ணன், குடந்தை பாலு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
கலைஞர் தமிழ் ஹரி ஆய்வு அறிஞர் விருது -பேராசிரியர் ராமகுருநாதன்
சுதேசி மித்ரன் தமிழ் இதழ் விருது – ஹரி கிருஷ்ணன்
தொல்காப்பியர் தமிழ் சங்க விருது – புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து
பைந்தமிழ் விருது – பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம்


