சென்னையின் சாலையோர வியாபாரிகள் மழைக் காலங்களிலும் வெயில் காலங்களிலும் தாங்கள் தொழில் செய்வதற்கு நிழற்குடை வேண்டி அந்தந்த பகுதியில் உள்ள தளபதி மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை அணுகினார்கள்.
அதையடுத்து தளபதி விஜய் உத்தரவின்படி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று முதல் கட்டமாக 50 நிழற்குடைகளை சென்னையில் உள்ள திருவான்மியூர், அம்பத்தூர், தாம்பரம், சாலிகிராமம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் சாலையோர நடைபாதை கடைகளுக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் திரு புஸ்ஸி N. ஆனந்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கள் தாமு, அப்புனு, பாலமுருகன், சூரியநாராயணன், தொண்டரணித் தலைவர் சரத் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


