படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கத்தான் செய்யும்; இப்படி ஒரு படம் எடுக்க கட்ஸ் வேண்டும்! -வனிதா விஜயகுமார், சோனியா அகர்வால் நடித்த தண்டுபாளையம் பட விழாவில் இயக்குநர் டைகர் வெங்கட் பேச்சு

வனிதா விஜயகுமார், சோனியா அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, டைகர் வெங்கட் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘தண்டுபாளையம்.’ படத்தில் பிர்லா போஸ், சூப்பர் குட் லட்சுமணன், டைகர் வெங்கட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினரோடு இயக்குநர்கள் ஆர்.அரவிந்த்ராஜ், மங்கை அரிராஜன், ஆர்.அரவிந்தராஜ், பட அதிபா் என்.விஜயமுரளி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பழனிகுமார், பத்திரிகையாளர்கள் கிரைம் செல்வராஜ், வி.எஸ்.ராமன், பாடலாசிரியர் சொற்கோ இரா.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் டைகர் வெங்கட் பேசியபோது, “’தண்டுபாளையம்’ படத்தை தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ஏற்கனவே எடுத்திருக்கிறேன், அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. காதல், ஆக்‌ஷன், க்ரைம் போன்ற ஜானர்களில் படம் எடுப்பது சுலபம். ஆனால், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, அதுவும் இதுபோன்ற கொடூரமான சம்பவங்களை மையமாக வைத்து படம் எடுப்பது என்பது மிகப்பெரிய சவால்.

திரைக்கதை கூட எழுதி விடலாம், ஆனால் அதை படமாக்கும் போது பல சிக்கல்கள் வரும். இப்படி ஒரு படத்தை எடுத்தால், நம் குடும்பத்தார் என்ன நினைப்பார்கள், நண்பர்கள் என்ன சொல்வார்கள், என்று யோசிக்க தோன்றும். இறுதியில் படத்தை அப்படியே வைத்துவிட வேண்டியது தான், மேலோட்டமாக சொல்ல வேண்டும், அப்படி சொன்னால் படம் வெற்றி பெறாது என்பதோடு மக்களிடம் சென்றடையாது. அதனால் தான் நான் இந்த படத்தை உள்ளபடியே எடுத்திருக்கிறேன். இப்படி ஒரு படம் எடுக்க கட்ஸ் வேண்டும். படத்தில் வன்முறை காட்சிகள் இருக்கத்தான் செய்யும், ஆனால் அதை வன்முறையாக பார்க்காமல், அதில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்க்க வேண்டும்.

தண்டுபாளையம் கேங் என்பது மிகப்பெரிய நெட் ஒர்க், இப்படவும் அவர்கள் பல்வேறு இடங்களில் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நடக்கும் இந்த இடத்தில் கூட அவர்கள் இருப்பார்கள். இந்த படத்தை என்ன செய்யலாம், என் மீது என்ன வழக்கு போடலாம் என்று திட்டமிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் பற்றி இன்னும் தெரியாத பல விசயங்கள் இருக்கிறது, அதை சொல்வதற்காக தான் தமிழில் இந்த படத்தை எடுக்கிறேன். தெலுங்கில் இரண்டாவது பாகத்தில் இயக்குநர் அவர்களை நல்லவர்களாக காட்டிவிட்டார், அதனால் படம் எடுபடவில்லை. காரணம், மிரட்டல். ஆனால், நான் எந்த மிரட்டலுக்கும் அடிபணிய போவதில்லை, அவர்களின் நிஜ முகங்களையும், இதுவரை சொல்லாத விசயங்களையும் தைரியமாக சொல்லப் போகிறேன். முதல் பாகம் கமர்ஷியலாக இருக்கும், இரண்டாவது பாகம் மிரட்டலாக இருக்கும்..

தண்டுபாளையம் படத்தில் நடித்த வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் எது சொன்னாலும், சீனியர் நடிகைகளாக இருந்தாலும், அதற்கு மறுப்பு சொல்லாமல் செய்தார்கள். அவர்கள் இந்த

சோனியா அகர்வால் பேசியபோது, முதல் முறையாக நெகடிவ் வேடத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் கதை சொன்ன போது நன்றாக இருந்ததால் ஒப்புக்கொண்டேன், படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

வனிதா விஜயகுமார் பேசியபோது, “இயக்குநர் கதை சொல்லும் போது தண்டுபாளையம் பற்றி எனக்கு தெரியாது. சரி ஓகே நல்ல வேடமாக இருக்கிறதே என்று ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு தான் அந்த கேங்கின் கொடூர முகம் தெரிந்தது. என்னடா இது இப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கணுமா என்று யோசித்தேன், இருந்தாலும் எனக்கு ஒரு வித்தியாசமான வேடமாக இருந்ததால் தைரியமாக நடித்தேன். தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்கள் வந்தாலும் நேட்டிவிட்டியான படங்கள் வருவது குறைந்து விட்டது. அப்படிப்பட்ட எடுப்பவர்களும் குறைந்து விட்டார்கள். நான் சிறு வயதில் என் அப்பாவுடன் பல படப்பிபுகளுக்கு சென்றிருக்கிறேன். அப்போதேல்லாம் அவரது வேடம், கெட்டப் போன்றவற்றை பார்த்து ரசித்திருக்கிறேன். ராதிகா அக்கா எப்படிப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இப்போது அதுபோன்ற படங்கள் வருவதில்லை.

நான் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு சுமார் 25 படங்களில் நடித்திருக்கிறேன். சில வெளியாகி விட்டது, சில வெளியாக இருக்கிறது. நெகட்டிவ், பாசிட்டிவ், என பல வித்தியாசமான வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், தனித்துவமான என் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் எனக்கு வரவில்லை, அது ஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். எனக்கு மட்டும் அல்ல, தமிழ் சினிமாவை நம்பியிருக்கும் எந்த நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு வருவதில்லை. ஆனால், மலையாள நடிகைகளுக்கு அந்த வாய்ப்பு தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு ஏன் அப்படி ஒரு வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை என்று யோசித்த நிலையில் தான் இந்த படத்தின் வாய்ப்பு வந்தது. இது ரொம்பவே ராவான படம், அதை அப்படியே இயக்குநர் எடுத்திருக்கிறார். அது ஏன் என்பது படம் பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.

நான் போல்டனா பொண்ணு எனக்கு ஓகே, சோனியா அகர்வால் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்ற உடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவரது நடிப்பை பார்த்து அசந்து விட்டேன். பிச்சு உதறியிருக்கிறார். இதில் வேறு ஒரு சோனியாவை பார்ப்பீர்கள். நான் தாய்லாந்தில் இருந்தேன். இந்த நிகழ்ச்சிக்காக வரவேண்டும் என்று நினைத்தேன், அதனால் வந்தேன். படக்குழுவினரும் நான் வர வேண்டும் என்பதற்காக எனக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து வர வைத்தார்கள். அவர்கள் நடிகர்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் டைகர் வெங்கட் சாருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்” என்றார்.

படக்குழு:
கதை, திரைக்கதை, வசனம், பாடல், தயாரிப்பு: டைகர் வெங்கட்
இயக்கம்: டைகர் வெங்கட் – கே.டி.நாயக்
ஒளிப்பதிவு: பி.இளங்கோவன்
இசை: ஜித்தின் கே.ரோஷன்
நடனம்: பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு: வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here