அன்பு மயில்சாமி நடிக்கும் ‘தந்த்ரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அன்பு மயில்சாமி, சுவாமிநாதன், சாம்ஸ் , சசி, சித்தா’ தர்சன், நடிகை மீனா, சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர் கே அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அன்பு மயில்சாமி பேசியபோது “அப்பா என்னை மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்” என்றார்.
படத்தின் இயக்குநர் வேதமணி “இந்த உலகம் முழுவதும் முழுமையாக நல்லதாக மாற வாய்ப்பிலை. அதே நேரத்தில் கெட்டது முழுமையாக ஆட்சி செய்யவும் வாய்ப்பில்லை. நல்லதும், கெட்டதும் நிறைந்ததுதான் உலகம் என்பதுதான் இந்த படத்தின் கதை” என்றார்.
சுவாமிநாதன் “சாம்ஸுடன் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது” என்றார்.
படத்தை வெளியிடும் ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் ”சிறு முதலீட்டு திரைப்படங்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது . தரமான திரைப்படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது” என்றார்.
ஆர் கே அன்புசெல்வன் “தயாரிப்பாளர்கள் படத்தை மட்டும் ஒழுங்காக எடுக்க வேண்டும். அவர்களே நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து வேலையும் பார்க்கக் கூடாது” என்றார்.
இந்த படம் வரும் அக்டோபரில் வெளிவர இருக்கிறது. ஆக்சன் ரியாக்சன் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

