மர்மமான முறையில் நடக்கும் மூன்று கொலைகளின் பின்னணி என்ன? அலசி ஆராயும் விறுவிறுப்பான கதையில் உருவாகும் ‘டாஸ்’ படத்தின் படப்பிடிப்பை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்து வாழ்த்து!

யாஷிகா ஆனந்த், விஜய் டிவி யோகி, தேஜா ஸ்ரீ, சஞ்சய் ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘டாஸ்’ படத்தின் துவக்க விழா கோவில்பட்டியில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

நிகழ்வில் படத்தை பற்றி பேசிய இயக்குநர் சகு பாண்டியன், ”மர்மமான முறையில் மூன்று கொலைகள் நிகழ்கின்றன. அதன் பின்னணி என்ன, யாஷிகா ஆனந்துக்கும் கொலைகளுக்கும் என்ன தொடர்பு என்பதை சொல்லும் ஒரு கிரைம் திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. யாஷிகா ஆனந்தும் தெலுங்கு திரையுலகிலிருந்து வந்திருக்கும் தேஜா ஸ்ரீ இன்னொரு நாயகியாகவும் நடிக்கிறார்கள். கோவில்பட்டி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் ஒரே கட்டமாக 25 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஊர் மக்களின் ஆதரவும், அன்பும் எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது.

முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம் எல் ஏவுமான திரு.கடம்பூர் C ராஜு அவர்கள் பூஜைக்கு வந்திருந்து எங்கள் குழுவை வாழ்த்தியதோடு, படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். TOSS என்ற தலைப்பே எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்” என்றார்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து இந்த வருட இறுதியில் அல்லது 2026 துவக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here