‘லோக்கல் சரக்கு’, ‘கடைசி தோட்டா’ உள்ளிட்ட படங்களின் பாடல்களை தனது இசையால் ஹிட்டாக்கியவர் சுவாமிநாதன் ராஜேஷ். அவரது இசையில் வெளியான ‘கண்ணோரமே’ ஆல்பம் பாடலும் டிரெண்டிங்கில் உள்ளது.
அவரது இசைத் திறமைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், குரு சந்திரன் தான் கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘மலையப்பன்’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.
குரு சந்திரன், மலைமேல் இருக்கும் கடவுள் மலையப்பன்’ கதையை சுவாமிநாதன் ராஜேஷிடம் சொன்னதையடுத்து, உடனடியாக ஐந்து பாடல்களுக்கு ட்யூன் ரெடி செய்தார். ஐந்தும் வெவ்வேறு விதமாக இருப்பதாக சொன்ன குருசந்திரநன் சுவாமிநாதன் ராஜேஷை கட்டிப் பிடித்துப் பாராட்டினார்.
இந்த படத்திற்காக காதல்மதி எழுதிய ‘வேஷங்கட்டிக்கிட்டு’ என்ற பாடலை பிரசன்னா பாட தனது இசையில் வீரமிக்க பாடலாக பதிவு செய்தார். பாடலைக் கேட்ட படக் குழுவினர் இசையமைப்பாளரை கைகுலுக்கி கைதட்டி பாராட்டினர்.
அடுத்ததாக மலையப்பன் படத்தில் பிரபல முன்னணி இசையமைப்பாளரை பாட வைக்க சுவாமிநாதன் ராஜேஷ் முயற்சி செய்து வருகிறார்.


