மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் தஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டார்.
சென்னை கடை வெறும் ஷாப்பிங் இடமல்ல — அது ஒரு அனுபவம். இந்தியாவின் மரபையும், நவீன அழகியலையும் ஒருங்கே பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கடை, இந்திய பாரம்பரியத்திலிருந்து ஈர்க்கப்பட்ட வடிவமைப்புகளால் நிரம்பியுள்ளது, இதன் மூலம் டஸ்வாவை வரையறுக்கும் காலமற்ற அழகை வெளிப்படுத்துகிறது.
இந்த கடையில் டஸ்வாவின் திருவிழா ஆடைத் தொகுப்பு — கண்கவர் குர்தா செட் மற்றும் குர்தா-புண்டி செட்கள், துடிப்பான ஸ்கிரீன் பிரிண்ட்கள் மற்றும் நவீன வடிவமைப்புகளுடன் பாரம்பரிய ஆடைக்கு புதுமையான தோற்றத்தை கொண்டு வந்துள்ளது. திருமணத் தொகுப்பில் அழகான ஷெர்வானிகள், அச்கான்கள், மற்றும் புதுமையான அங்க்ரகா ஷெர்வானிகள் ஆகியவை சிறப்பாக தையலிடப்பட்ட நுண்ணிய எம்பிராய்டரி பணிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
டஸ்வா பிராண்ட் தலைவர் அஷிஷ் முகுல் “சென்னையில் எங்கள் புதிய திருவிழா மற்றும் திருமண ஆடைத் தொகுப்பு டஸ்வாவின் அடிப்படை மதிப்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் — அது ஸ்டைல், மரபு, மற்றும் கைவினைப் பணியின் சேர்க்கையாகும். ஒவ்வொரு கலெக்ஷனும் வாடிக்கையாளர்களுக்கு சீரான மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற ஷோரூம் ஸ்டைலிஸ்ட்கள் தனிப்பட்ட ஃபேஷன் ஆலோசனைகளோடு, நவீனத்தன்மை மற்றும் மரபும் இணைவதால் ஒரு தனித்துவமான அனுபவம் டஸ்வா வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்” என்றார்.
தென்னிந்தியாவில் டஸ்வாவின் விரிவாக்கத்திற்கான முக்கியமான படியாக இந்த சென்னை கடை அமைகிறது. பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, மற்றும் சமீபத்தில் புனே ஆகிய நகரங்களில் ஏற்கனவே தன் அடித்தளத்தை வலுப்படுத்திய டஸ்வா, தென்னக சந்தையில் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
“சென்னை நகரம் அதன் செழுமையான கலாச்சார பாரம்பரியம் மற்றும் ஃபேஷன் மையமாக இருப்பதால், எங்கள் அடுத்த கடைக்கான இயல்பான தேர்வாக இருந்தது. நகரத்தின் தேர்ந்த வாடிக்கையாளர்கள் டஸ்வாவின் கைவினைத் திறனையும், தரத்தையும், ஸ்டைலையும் நிச்சயமாக மதிப்பார்கள்,” என முகுல் கூறியிருக்கிறார்.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு கூறியதாவது :
“திருவிழா காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். இங்கே கொண்டாடப்படும் விழாக்கள் கலாச்சார ரீதியாக பெரும் அர்த்தம் கொண்டவை. டஸ்வாவின் கலெக்ஷன் இதற்குத் தகுந்ததாக இருக்கிறது என்று நான் நம்புகிறேன். சென்னையில் வளர்ந்த எனக்கு, குடும்ப விழாக்களும், பண்டிகைகளும் எப்போதும் மனதில் சிறப்பு இடம் பெற்றவை. அந்த தருணங்களில் நம்மை நாமே சிறப்பாக உணர்வது முக்கியம். திருமணமாகட்டும், விழாவாகட்டும் — டஸ்வாவின் ஆடைகள் ஆண்களுக்கு வசதியுடன் ஸ்டைலாகக் கொண்டாடும் வாய்ப்பை வழங்குகின்றன. என் சொந்த ஊரில் இதை பகிர்வது எனக்கு இன்னும் தனிப்பட்ட மகிழ்ச்சியை அளிக்கிறது.”
ஷோரூம் முகவரி: 1வது மாடி, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால், கடை எண் S157 & 158, பட்டுலோஸ் ரோடு, சென்னை – 600014
நேரம்: காலை 11.00 மணி – இரவு 9.00 மணி
ஆன்லைனில்: www.tasva.com
டஸ்வா பற்றி: ABFRL மற்றும் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய l டஸ்வாவின் பிரத்யேக கடைகள் இந்தியாவின் பல நகரங்களில் உள்ளன மற்றும் ஆன்லைனில் www.tasva.com-இல் கிடைக்கின்றன.