‘ட்யூட்’ ஹிருது ஹாரூன் நடிக்கும் ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

ஹிருது ஹாரூன், சம்யுக்தா விஸ்வநாதன் நடித்துள்ள மியூசிக்கல் எண்டர்டெயினர் திரைப்படம் ‘டெக்சாஸ் டைகர்’ சென்னையின் வண்ணமயமான பின்னணியில், இளமைத் துள்ளலாக, பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

ரோகிணி மொல்லேட்டி, சாச்சனா, வாஃபா கதீஜா, பீட்டர் கே, பார்த்திபன் குமார், ஆண்டனி தாசன் மற்றும் சம்யுக்தா ஷான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்னையை சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘ஃபேமிலி படம்’ இயக்குநர் செல்வகுமார் திருமாறன் எழுதி, இயக்கியிருக்கும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியானதும் இணையத்தில் டிரெண்டாகி ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்றது. இப்போது முதல் பார்வை வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here