கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் ‘டேலண்ட்.’ விரைவில் படப்பிடிப்பு துவக்கம்!

முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து, தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகவிருக்கிற திரைப்படம் ‘டேலண்ட்.’ இந்த படத்தில் நாயகியாக ராசியா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு, தினேஷ்,கார்த்திக் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் இரண்டாம் வாரத்தில், கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் முழு வீச்சில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
சில்பகலா புரொடக்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கும் அலெக்சாண்டரிடம் பேசினோம்… ”தேசியளவில் கால்பந்து விளையாட்டில் முன்னணியில் இருக்கும் தனது தந்தை சில சந்தர்ப்ப சூழ்நிலையால் உடல் நலக்குறைவால் நடக்க முடியாமல் படுக்கையே கதி என்று வாழ்கிறார். அதனால் தனது வறுமையைப் போக்கவும் அப்பாவைப் போல் தானும் ஒரு நல்ல கால்பந்து வீராங்கனையாகி நாட்டுக்கு பெருமை சேர்க்க முயற்சிக்கும் கதாநாயகிக்கு
அவள் எதிர்பாராத விதத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. அதனை மீறி நாயகி ஜெயித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here