Home பொது தனது 71வது பிறந்தநாளில் டி ராஜேந்தர் 1000 பேருக்கு ‘அரிசி தானம்.’ 

தனது 71வது பிறந்தநாளில் டி ராஜேந்தர் 1000 பேருக்கு ‘அரிசி தானம்.’ 

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கினார்.

நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக நடைபெற்றது. டி.ராஜேந்தர் தலைமை ரசிகர் மன்றத்தின் அமைப்பாளரும், STR தலைமை ரசிகர் மன்றத்தின் தலைவருமான டி வாசு அவர்கள் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்.

டி.ராஜேந்தர் தனது பிறந்தநாளை முன்னிட்டு எழுதி, இசையமைத்த பாடலை அனைவர் முன்பும் பாடினார்.
அந்த பாடல்…
‘ஆண்டவன் கொடுத்த ஆத்மா
அன்பா வாழ்ந்து காட்டுமா
இருந்தா எடுத்துக் கொடுக்குமா
ஏழைத் துயரை துடைக்குமா
வானம் தான் பரந்தது
தானம் தான் சிறந்தது
இரக்க குணத்தில்
இறைவன் இருக்கின்றான்
கருணை வடிவில்
கடவுள் வாழ்கிறான்
அன்பே தெய்வம்
அறங்கள் செய்வோம்
ஆத்மனை நினைப்போம்
ஆதரவு அளிப்போம்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்