ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தீராக்காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடு!

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய படம் ‘தீராக் காதல்.’

இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும், தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ என பிரமாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here