அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தை திரில்லர் சப்ஜெக்டில் இயக்கி கவனம் ஈர்த்த அரவிந்த் ஶ்ரீநிவாசன் அடுத்ததாக இயக்கும் படம் ‘தருணம்.’
‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்து இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த கிஷன்தாஸ் நாயகனாக நடிக்க, நாயகியாக தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.
இந்த படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உற்சாகமாக துவங்கியது.
முதல் படத்தை திரில்லராக கொடுத்த அரவிந்த் ஶ்ரீநிவாசன், இப்போது தருணம் படத்தை மனம் வருடும் மிக மென்மையான காதல் கதையாக உருவாக்குகிறார். ஸென் ஸ்டுடியோஸ் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து, இயக்கம் – அரவிந்த் ஶ்ரீநிவாசன்
ஒளிப்பதிவாளர் – ராஜா பட்டாசார்ஜி
இசை – தர்புகா சிவா
படத்தொகுப்பு – அருள் இ சித்தார்த்
கலை இயக்குனர் – வர்ணாலயா ஜெகதீசன்
மக்கள் தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM)
சண்டைப்பயிற்சி – Stunner சாம்
தயாரிப்பாளர் – புகழ் ஏ ஈடன் (ழென் ஸ்டுடியோஸ்)
இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்