திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை நேரத்தில் ஜெயா தொலைக்காட்சியில் இடம்பெறும் நிகழ்ச்சி ‘தேன் கிண்ணம்.’
இதில் 1960, 70, 80, 90களில் வெளிவந்த ஹிட்டான பாடல்களுடன், பாடல்கள் குறித்த அறியப்படாத பின்னணி தகவல்களும் இடம்பெறுகின்றன.
பழம்பெறும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்று தங்கள் திரையுலக அனுபவங்களையும், தங்களுக்கு பிடித்த பாடல்களையும் பகிர்கின்றனர்.
பழைய திரைப்பட பாடல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டு ‘ஞாயிறு தேன்கிண்ணம்’ என்ற தலைப்பில் காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகிறது.