‘உதவும் உள்ளங்கள்’ என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்காக ‘ஆனந்த தீபாவளி’ என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ‘ஆனந்த தீபாவளி’யின் 25-வது வருடமான இந்த ஆண்டில் ஏராளமான குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகைகள் வாணி போஜன், தான்யா ரவிசந்திரன், நடிகர்கள் கருணாகரன், அஷ்வின் உள்ளிட்ட பிரபலங்கள் குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.