இயக்குநர் விக்ரமனின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’ படப்பிடிப்பு துவக்கம்!

குடும்பப் பங்கான, உணர்வு பூர்வமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஹிட்லிஸ்ட்.’

இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மட்டுமல்லாது கே.எஸ்.ரவிக்குமார், சித்தாரா, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎப் புகழ் கருடா ராமச்சந்திரா, மைம் கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

நேற்று விஜய் கனிஷ்காவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விஜய் கனிஷ்கா – சித்தாரா  இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

‘ஹிட்லிஸ்ட்’ அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த தெனாலி மற்றும் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற கூகுள் குட்டப்பா ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின்  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது இந்த படம்.

ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் படத்தொகுப்பை ஜான் மேற்கொள்ள, கலை வடிவமைப்பை அருண் கவனிக்கிறார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here