மராட்டியில் ‘அதுர்ஷ்யா’ படத்தின் மூலம் கலக்கும் இயக்குநர் கபீர்லால் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் ‘உன் பார்வையில்.’
பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் கபீர்லால் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மராட்டி திரைப்படம் “அதுர்ஷ்யா”. ரசிகர்களின் பேராதரவை பெற்று பெரு வெற்றிபெற்றிருக்கும் இப்படம் IMDB தளத்தில் 9.5 ஸ்டார் ரேட்டிங் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. தற்போது இயக்குநர் கபீர் லால் தமிழில் ஒரு திரைப்படத்தினை உருவாக்கியுள்ளார்.
தமிழில் புதுமையான க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு “உன் பார்வையில்” என தலைப்பிடப்பட்டுள்ளது. நடிகை பார்வதி நாயர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் கபீர்லால் இயக்கியுள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில், படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.பார்வையற்ற நாயகி, திடீரென கொல்லப்பட்ட தன் தங்கையின் மரணத்திற்கு யார் காரணம் என தேட ஆரம்பிக்கிறாள். அவளின் தேடலும், அதை தொடர்ந்து நடக்கும் மர்மமான சம்பவங்களும் தான் கதை.
