புதுச்சேரி; அரியாங்குப்பம் தொகுதி தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து தலைமையில், வீராம்பட்டினம் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு அரியாங்குப்பம் ஜெம்மிஸ் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவும், அரியாங்குப்பம் செல்வா ஏற்பாட்டில் நீர்மோர், வெள்ளரி உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஜி. சரவணன் முன்னிலை வகித்தார். முதலியார்பேட்டை மணிபாலன், அரியாங்குப்பம் வசந்த், உருளையன்பேட்டை நாகராஜ் என தொகுதித் தலைவர்கள் மற்றும் திரளான மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.