


அந்தவகையில் மலையாளத்தில் உருவாகி, கேரளாவில் கம்யூனிஸ்ட்களின் எதிர்ப்பை சம்பாதித்த ‘பிப்ரவரி-29’ என்கிற படமும் ஆகஸ்ட்18-ம் தேதி மூவி வுட் தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.
வருடத்திற்கு வெறும் 99 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்தி இந்த தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களையும் பார்க்க முடியும். இல்லாவிட்டாலும் விரும்பும் படங்களை 5 ரூ முதல் 50 ரூ வரை கட்டணம் செலுத்தி பார்க்கிற வசதியும் இந்த தளத்தில் (மட்டுமே) உண்டு.
தெளிவு பாதையில் நீச தூரம், விண்வெளி பயணக்குறிப்புகள், உலக திரைப்பட விழாவில் விருது பெற்ற இன்ஷா அல்லா என சிறிய பட்ஜெட்டில் உருவான மிகச்சிறந்த படங்களையும் இதில் பார்த்து ரசிக்கலாம். அதுமட்டுமல்ல ரசிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தங்களது அபிமான நடிகர்களின் சிறந்த படங்களையும் இதில் பார்க்க முடியும்.
தியேட்டர்களில் ரிலீஸாகும் வாய்ப்பு கிடைக்காத சிறிய படங்களை வசூல் பங்கீடு என்கிற முறையில் இந்த தளத்தில் வெளியிடும் வசதியும் உண்டு. சிறிய பட்ஜெட் படங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய முடியும்.