ரிலீஸுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் 50-வது படம்!

விஜய் சேதுபதியின் 50-வது படம் ‘மகாராஜா.’ இந்த படத்தை ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்குகிறார்.

விஜய் சேதுபதியோடு அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், மம்தா மோகன்தாஸ், அபிராமி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன், சரவணன் சுப்பையா, எஸ்.எஸ்.ஸ்டான்லி, கல்கி, காளையன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிவடைந்து, பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.

வெற்றிப் படங்களை தந்தவர்கள் இணையும்போது ஏற்படுகிற எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு பான் இந்திய அளவில் ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான படங்களைத் தந்த ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் ‘தி ரூட்’ ஜெகதீஷ் பழனிச்சாமியுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

விரைவில் படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

படக்குழு:-
இசை: அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
கலை இயக்குநர்: வி செல்வகுமார்
வசனம்: நித்திலன் சாமிநாதன் & ராம் முரளி
சண்டைப்பயிற்சி: அனல் அரசு
ஒப்பனை: ஏஆர் அப்துல் ரசாக்
ஆடை வடிவமைப்பாளர்: தினேஷ் மனோகரன்
படங்கள்: ஆகாஷ் பாலாஜி
டிஜிட்டல் புரமோஷன்: கார்த்திக் ரவிவர்மா
தயாரிப்பு நிர்வாகி: கே சக்திவேல்-சுசி காமராஜ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here