Home சினிமா அருண் விஜய் கைகளில் ஆத்திக நாத்திக சிலைகள்… ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்...

அருண் விஜய் கைகளில் ஆத்திக நாத்திக சிலைகள்… ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுவாரஸ்யம்!

வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள பாலா இயக்கும் படம் ‘வணங்கான்.’

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தை, ‘மாநாடு’ என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரிக்கின்றன.

படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கைகளில் சிலைகளை வைத்துக்கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத்தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக்காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பு பணிகளை ஏ ஜான் கவனிக்கிறார்.

அடுத்தாண்டு ஜனவரியில் பொங்கல் பண்டிகையின்போது படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்