சிவகார்த்திகேயனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்! பரபரக்கும் தமிழ் சினிமா; உற்சாகத்தில் ரசிகர்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இணையும் புதிய படத்தை ‘ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ்’ தயாரிக்கவிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இருவரும் இணையும் படம் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்பு தற்போது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த படம், இந்திய சினிமாவில் புதுமையான களத்தில், பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகவுள்ளது.

தமிழ் திரையுலகில், தனது திரைபயணத்தில் பல ப்ளாக்பஸ்டர் படங்களைத் தந்து,  பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களுக்கு புதிய இலக்கணம் தந்தவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். பெரிய ஹீரோக்களை வைத்து, இவர் உருவாக்கிய அத்தனை படங்களும், ஹீரோக்களுக்கு மட்டுமல்லாமல், படத்தின் அத்தனை கலைஞர்களுக்கும் திருப்புமுனை படங்களாக அமைந்தன. தற்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் என்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொலைக்காட்சி வழியே அறிமுகமாகி, தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலிருந்து, அவரது தற்போதைய வளர்ச்சி அபாரமானது.  வெறும் கமர்ஷியல் நாயகனாக இல்லாமல்,  புதிய கதைக்களத்தில், வித்தியாசமான படைப்புகளுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் நடிப்பால் கட்டிப்போட்டுள்ளார். தனக்கென தனி ரசிகர் வட்டம், மிகப்பெரிய மார்க்கெட் என அசத்தும், சிவகார்த்திகேயன்,  இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் முதல் முறையாக இணைகிறார்.

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் இணையும் இந்தப் புதிய திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரு புதிய பிரம்மாண்டமாக,  புதுமையான களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில், அனைவரும் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. பெரும் பொருட்செலவில் ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும்  தொழில் நுட்ப கலைஞர்களின் குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here