விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ கலகலப்பு; மீண்டும் அதே கூட்டணி கைகோர்ப்பு!

விஷ்ணு விஷால் நடிப்பில் 2022-ல் வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.

இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்தாண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் விஷ்ணு விஷாலும் ‘கட்டா குஸ்தி’ பட இயக்குநர் செல்லா அய்யாவு  இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், ‘கட்டா குஸ்தி, ‘எஃப் ஐ ஆர்’ என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப் படங்களைத் தந்து வரும், ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் 11-வது படைப்பாக, மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

இந்த புதிய படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

மிகப்பெரிய வெற்றியைத் தந்த, கட்டா குஸ்தி’ கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘படம் குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படைப்பாக இருக்கும்’ என்கிறது படக்குழு.

படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here