திரைப்பட இயக்குநர் வி. சி. குகநாதன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…
என் இந்திய சகோதர சகோதரிகளே….! நம் தாய் நாட்டை கெடுமதியாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு நாம் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்பதில்லை! பல ஆயிரம் உத்தம தியாகிகள் இன் உயிரை மாய்த்து பெற்றுத் தந்த சுதந்திரத்தை மீட்பதற்கு நமக்கு கட்சிகளும் அவசியமில்லை. நமக்குப் பிடித்த தலைவர்களும் வேண்டியதில்லை. அவர் சரியா இவர் சரியா என்ற வாக்குவாதங்களும் அவசியமில்லை. நான் ஒரு இந்தியன்… என் நாடு பாரத் என்று அழைக்கப்படும் இந்திய மாநிலங்களின் ஒன்றியம். இது ஒரு இறையாண்மை கொண்ட …. சோசியலிச.. மதசார்பற்ற ஜனநாயக குடியரசு ஆகும்! இந்த அரசியல் அமைப்பின் தனிச்சிறப்பே தனி மனிதனின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது தான்! அதற்கு குந்தகம் விளைவிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களை தோற்கடிக்க என்னிடம் வாக்குரிமை என்ற பலமான ஆயுதம் உள்ளது. அதை வைத்து சூழ்ச்சிக்காரர்களை வெல்வோம் என்ற மன உறுதியே போதுமானது!
2024 நாடாளுமன்ற தேர்தலிலே சர்வாதிகார மத வாத கெடுமதியாளரை வேரோடு சாய்த்து வீழ்த்தி இமயத்திலே சுதந்திர இந்திய ஒன்றியத்தின் மூவர்ணக் கொடியை ஏந்தி கொண்டாடுவோம்! இதற்கான சாதனை இங்கே நமது தமிழ்நாட்டில் இருந்தே ஆரம்பமாகட்டும்!