கொடைக்கானலில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அதிர்ச்சியூட்டும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, பித்தாக் புகழேந்தி இயக்கியுள்ள படம் ‘வட்டக்கானல்.’
வட்டக்கானல் பகுதியில் மட்டும் காணப்படும் மேஜிக் மஷ்ரூம் என்கிற ஒரு விஷயத்தை படத்தின் கதை சுற்றிச் சுழல்கிறது.
‘ஒருமுறை சாப்பிட்டா, ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா இருவரும் சேர்ந்து வாசிச்சா….. எப்படியிருக்கும்’ என்ற வரிகளோடு ஆரம்பிக்கும் இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஆயிரக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் கதாநாயகன் துருவன் மனோ. அவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜ் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ஆர் கே சுரேஷ், பாடகர் மனோ
ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வண்ண வண்ண பூக்கள் வினோதினி, ஆர் கே வரதராஜ் மற்ற கதாபாத்திரங்களில் முருகானந்தம், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், கபாலி விஷ்வந்த், பாத்திமா பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
டாக்டர் ஏ மதியழகன், வீரம்மாள், ஆர் எம் ராஜேஷ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வரவுள்ளது.


